Wednesday, 29 April 2015

இந்திராவதி ஆறு


இந்திராவதி ஆறு  கோதாவரி ஆற்றின் கிளை ஆறு ஆகும். இது மத்திய இந்தியாவில் ஓடுகிறது. இந்த ஆறு கிழக்குத் தொடர்ச்சி மலையின் தண்டகாரண்ய மலைத் தொடரில் உற்பத்தியாகிறது. இது சட்டீஸ்கர், மகாராட்டிரம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லை வழியாகச் செல்கிறது. மகராட்டிரத்திற்கும், சட்டீஸ்கருக்கும் இடையே பல இடங்களில் இந்த ஆறே எல்லையாக உள்ளது. இந்தியாவின் மிகவும் பசுமையான மாவட்டமாக அறியப்படும் பாஸ்டர் வழியாகச் செல்கிறது.

0 comments:

Post a Comment