Tuesday, 10 February 2015

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை


1. இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’ என்று ஒத்திப் போடாதீர்கள்.
2. நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.
3. பணம் கைக்கு வரும்முன்னே அதற்கான செலவுகளைச் செய்யாதீர்கள்.
4. விலை மலிவாய்க் கிடைக்கிறது என்பதற்காக, வேண்டாத ஒன்றை வாங்காதீர்கள்.
5. பசி, தாகத்தை விட சுயமரியாதை பெரிது என்பதை மறவாதீர்கள்.
6. எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாய்ச் சாப்பிடுங்கள்.
7. விரும்பிச் செய்யும் எதற்காகவும் பின்னால் வருத்தப்படாதீர்கள்.
8. கற்பனையில் உருவாகும் கவலைகளை எண்ணி நிஜத்தில் வருந்தாதீர்கள்.
9. மென்மையாக அணுகுங்கள், மேன்மையாக முடிவெடுங்கள்.
10. கோபமாயிருக்கும் போது, பேசுவதற்கு முன்னால் பத்து வரை எண்ணுங்கள். இன்னும் கோபமாயிருந்தால் நூறுவரை எண்ணுங்கள்.

Thursday, 5 February 2015

மாயயை நிஜமாக்கும் ஹோலோ லென்ஸ்


யாரும் எதிர்பார்க்காத வகையில், மாயயை நிஜமாக்கும் ஹோலோ லென்ஸ மைக்ரோசாப்ட். விண்டோஸ் 10 அறிமுக நிகழ்வில், ஹோலோ லென்ஸ் (HoloLens) குறித்து அறிவித்தது. ஹோலோ
லென்ஸ் என்பது தலையில் அணிந்து பார்க்க வேண்டிய ஒரு சாதனம். விண்டோஸ் 10 இயக்கத்தை இதன் வழியாகப் பார்க்கையில், நம் நிகழ் உலகமும், கற்பனையான மாயை உலகமும் இணைந்து காட்சிகளை வழங்கும். எடுத்துக் காட்டாக, செவ்வாய் கிரகம் குறித்து கம்ப்யூட்டரில் இயக்குகையில், இதன் வழியே பார்த்தால், நாம் அதன் பரப்பில் நடந்து சென்று, அனுபவிக்கும் உணர்வினைப் பெறுவோம். நம் நிகழ் உலகின் மேலாக, டிஜிட்டல் ஹோலோகிராம் உலகம் நமக்குக் காட்டப்படும். நாம் காணும் நிகழ்வு, சாதாரணமாக நாம் பார்க்கும் ஸ்கைப் விண்டோவாகவும் இருக்கலாம்; முப்பரிமாண மாடல் பொருளாகவும் இருக்கலாம். எந்தப் புதிய தொழில் நுட்பத்தின் விளைவையும் எழுத்தில் விளக்குவது எளிதல்ல; அதனை உணர்ந்து பார்த்தால் தான், அதன் முழு தாக்கத்தினையும் உணரலாம். ஹோலோ லென்ஸ் சாதனத்திற்கு இது முற்றிலும் பொருந்தும்.

ஐடியா வாடிக்கையாளருக்கு புதிய ஈஸி ஷேர் திட்டம


ஐடியா செல்லுலார் நிறுவனம் செவ்வாய்க்கிழமை அன்று ஈஸி ஷேர் திட்டங்களை ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்காக தொடங்கியுள்ளது. மேலும்,
கடந்த ஆண்டில் சில சந்தைகளில் போஸ்ட்பெய்டு திட்டங்களையும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தனிப்பட்ட தயாரிப்பு, இந்தியாவில் உள்ள ப்ரீபெய்ட் யூசர்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் போது, இரண்டு தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் மல்டிபுள் சாதனங்களை கொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது, ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் மல்டிபுள் கனெக்ஷனை பயன்படுத்தி பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐடியாவின் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்காக புதிய ஈஸி ஷேர் ப்ரீபெய்ட் திட்டங்கள், ரூ.158 முதல் ரூ.958 வரை இருக்கும். இண்டர்நெட், உள்ளூர் மற்றும் வெளியூர் குரல் நிமிடங்கள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற அனைத்து திட்டங்களும் இதில் அடங்கும். இந்த திட்டம் தற்போது ப்ரீபெய்ட் ஐடியா சந்தாதாரர்களுக்காக அமல்படுத்தப்பட்டுள்ளது. யூசர்கள் ஐடியாவின் ஈஸி ஷேர் திட்டங்களை கொண்டு நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைத்து ஐடியா வாடிக்கையாளர்களுக்கும் இன்டர்நெட் டேடா, குரல் நிமிடங்கள் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவற்றை யுஎஸ்எஸ்டி அல்லது ஐடியா இணையதளத்தில் உள்நுழைவது போன்ற எளிய செயல்முறையை பயன்படுத்தி பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

Wednesday, 4 February 2015

Please share

Good news- Supreme Court has announced now that any person who meets road accidents can be taken to nearby hospital immediately.
Hospital must not  ask for police report to admit him/her, its Dr. duty to do first aid. Police can be informed later.
Please pass to all. It may help someone... to save life. Plz sent 2 all......��������
==========================

Railway authorities have introduced a system where one can complain from a running train.
The SMS about complaint will be acknowledged & attended.
Give the train no, bogie no,precise nature of  complaints like
-no water in bath room/
no lights/
fan not working/
security problem etc through sms.
It is an effective tool.
The railway complaint sms
no: is 8121281212.
Please pass on this message, its very helpful
==========================

1.  If you see children Begging anywhere in INDIA, please contact:
"RED SOCIETY" at 9940217816. They will help the children for their studies.
==========================

2.  Where you can search for any BLOOD GROUP, you will get thousand's
of donor address. www.friendstosupport.org
==========================

3. Engineering Students can register in www.campuscouncil.com to
attend Off Campus for 40 Companies.
==========================

4. Free Education and Free hostel for Handicapped/Physically
Challenged children. Contact:- 9842062501 & 9894067506.
==========================

5. If anyone met with fire accident or people born with problems in
their ear, nose and mouth can get free PLASTIC SURGERY done by
Kodaikanal   PASAM Hospital.
By German
Doctors. Everything is free. Contact : 045420-240668, -245732 "Helping
Hands are Better than Praying Lips"
==========================

6. If you find any important documents like Driving license, Ration
card, Passport, Bank Pass Book, etc., missed by someone, simply put
them into any near by Post Boxes. They will automatically reach the
owner and Fine will be collected from them.
==========================

8.  It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all
Human beings on earth.
"TREES DO IT FOR FREE"
"Respect them and Save them"
==========================

9.   Special phone number for Eye bank and Eye donation: 04428281919
and 04428271616 (Sankara Nethralaya Eye Bank). For More information
about how to donate eyes plz visit these sites. http://ruraleye.org/
==========================

10.  Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Valli Baba
Institute Banglore. 10. Contact : 9916737471
==========================

11. Medicine for Blood Cancer!!!!
'Imitinef Mercilet' isa medicine which cures blood cancer. Its
available free of cost at "Adyar Cancer Institute in Chennai". Create
Awareness. It might help someone.
Cancer Institute  in Adyar, Chennai
Category:  Cancer
Address:
East Canal Bank Road, Gandhi Nagar
Adyar, Chennai -600020
Landmark: Near Michael School
Phone:  044-24910754  044-24910754 ,  044-24911526  044-24911526 ,
044-22350241  044-22350241
======================
AND LETS TRY TO HELP INDIA BE A BETTER PLACE TO LIVE IN
Please Save Our Mother Nature for
"OUR FUTURE GENERATIONS"

நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம

அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி.
அடிக்கடி அதைப் பார்ப்பார்.
பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார்.
பக்கத்து வீட்டு இளைஞனுக்குக்
குறுகுறுப்பு…!
‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான்இருக்கிறது?
பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!
ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’
அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
பெரியவரை நெருங்கினான்.
“ஐயா…!”
“என்ன தம்பி?”
“உங்கள் கையில்
இருப்பது கண்ணாடிதானே?”
“ஆமாம்!”
“அதில் என்ன தெரிகிறது?”
“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ
பார்த்தால் உன் முகம் தெரியும்!”
“அப்படியானால் சாதாரணக்
கண்ணாடிதானே அது?”
“ஆமாம்!”
“பிறகு ஏன் அதையே பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள்?”
பெரியவர் புன்னகைத்தார்.
“சாதாரணக் கண்ணாடிதான், ஆனால்
அது தரும் பாடங்கள் நிறைய!”
“பாடமா…! கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?”
“அப்படிக் கேள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
“உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்”
என்று சொல்லியிருக்கிறார்கள்.
எத்துணை ஆழமான உவமை இது!”
“இந்த உவமையில் என்ன இருக்கிறது?
எனக்கு ஒன்றும் புரியவில்லை!”
“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச்
சுட்டிக்காட்ட வேண்டும்; எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும்
என்பதை யெல்லாம் இந்தச் சின்ன உவமை மூலம் இறைத்தூதர் சிறப்பாகச்
சொல்லி விட்டார்!”
“எப்படி?”
“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால்
கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி கூட்டுவதும்
இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?
“ஆமாம்”
“அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்
எந்த அள வுக்குக் குறை இருக்கிறதோ அந்த
அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது.
துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.
இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”
“அடடே…! வெரி இன்ட்ரஸ்டிங்! அடுத்து…?”

“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்
போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால்
கண்ணாடி மௌனமாகிவிடும்.
இல்லையா?”
“ஆமாம்!”
“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம்
நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”
“கிரேட்! அப்புறம்?”

“ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்
கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படு கிறாரா?”
“இல்லையே…! மாறாக அந்தக்
கண்ணாடியைப் பத்திர மாக அல்லவா எடுத்து வைக்கிறார்!”
“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம்
உள்ள குறை களை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ,
எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும்.
அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும்.
இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”

“ஐயா…! அருமையான விளக்கம். அண்ணல்
நபிகளார் கூறிய கண்ணாடி உவமையில்
இத்தனை கருத்துகளா…! அப்பப்பா!”
“யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்!”

“இனி கண்ணாடி முன்னால் நின்று என் முகத்தை அலங் கரிக்கும் போதெல்லாம்
இந்த அறிவுரைகள் என் மனத்தை அலங்கரிக்கும்!”

பெரியவர் இளைஞனின் முதுகில் செல்லமாய்த் தட்டிக் கொடுத்தார்.

ஆம் சகோதரர்களே ! நாமும் அவ்வாறே நடக்கலாமே!!

நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி?


* உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய்.

* வங்கியில் உனக்குப் பணமிருந்தால் அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன்.  (80% மக்களுக்கு வங்கிக் கணக்கே இல்லை!)

* உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.

* நினைத்த நேரத்தில் நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால் அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.

* நோயின்றி, காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலேயே உயிர் துறந்த பலரைவிட நீ பாக்கியவான்.

* பார்வையின்மை, செவித்திறன் குறைபாடு, வாய் பேசாமை, உள்ளிட்ட எந்த குறைபாடுகளும் இல்லாது நீ இருந்தால் அவ்வாறு உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கின்றாய்.

* போர், சிறைத்தண்டனை, பட்டினி போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உனக்கு உலகிலுள்ள 70 கோடி மக்களுக்குக் கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என்பதை அறிந்திடு.

* கொடுமைக்கு உள்ளாக்கப்படாமல் நீ விரும்பும் தெய்வத்தைத் தொழ முடிந்தால், உலகிலுள்ள 300 கோடி மக்களுக்குக் கிடைக்காத சலுகையைப் பெற்றவன் நீ.

* உன் பெற்றோரை பிரியாமல் அவர்கள் உங்களுடன் இருந்தால் நீ துன்பத்தை அறியாதவன் என்பதைப் புரிந்து கொள்.

தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு பபுள் டாப்பில் தண்ணீர் கிடைக்கிறதா? அப்படியெனில் நீங்கள் கொடுத்து வைத்தவர். ஏனெனில், உலகம் முழுதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை.

* உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால் அவ்வாறு செய்ய இயலாத அளவுக்குத் தைரியமும் நம்பிக்கையும் இல்லாதவர்களையும்விட நீ கொடுத்து வைத்தவன்.

*கல்வியறிவு பெற்றிருந்து இந்தச் செய்தியைப் உன்னால் படிக்க முடிந்தால் அவ்வாறு செய்ய இயலாத 80 கோடி பேர்களுக்குக் கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய். (உலக அளவில் எழுத படிக்க தெரியாத மக்களின் எண்ணிக்கை மட்டுமே 80 கோடிக்கும் மேல்).

* இணையத்தில் இந்த செய்தியை உன்னால் பிரவுசிங் செய்து படிக்க முடிந்தால் அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்.

நீங்கள் அனுபவித்து வரும் வசதிகளையும், தொழில்நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல் ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல் கோடிக்கணக்கானோர் இந்த உலகில் இருக்க, ஆண்டவன் இவ்வளவு விஷயம் உங்களுக்கு கொடுத்திருக்கும்போது நீங்க அதிர்ஷ்டசாலி இல்லையா பின்னே?

மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு:


மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும். தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும். 60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது.

உறக்கத்திலேயே இறந்துவிடுவர். தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும். ஆகவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

Monday, 2 February 2015

செரிமான பிரச்சனைகளைத் தடுக்க ஆயுர்வேதம் சொல்லும் சிறப்பான வழி

நம்மில் பலரும், பல நேரங்களில் உண்ணக்கூடிய அளவை விட அதிகமாக சாப்பிடுவோம், ஜங்க் உணவுகளை உண்ணுவோம் அல்லது ஏதாவது வேளைகளில் உண்ண வேண்டிய உணவை உண்ணாமல் தவிர்த்து விடுவோம். அதற்கு காரணம் நமக்கு இருக்கும் வேலைப்பளு அல்லது மனஅழுத்தம். இதில் ஏதாவது ஒன்று நடந்தாலும் பாதிக்கப்படக்கூடியது நம் செரிமான அமைப்பே. இதனால் நம் உடல் ஆரோக்கியமும் கெட்டு விடும். செரிமானமின்மை, வயிற்று பொருமல், அமில எதிர் செயலாற்றல், மலச்சிக்கல், சளி, புண்கள் ஆறுவதற்கு நீண்ட காலமாவது, குறைந்த ஆற்றல் திறன்கள் போன்ற பல விதமான பிரச்சனைகளை இதனால் நாம் சந்திக்க வேண்டியிருக்கும். இந்தியாவில் உள்ள 5000 வருட பழமையான ஆயுர்வேத மருத்துவத்தில், 3 நாட்கள் செரிமான மீட்டமைப்பு செயல்முறை ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பின்பற்றினால் நம் செரிமானம் நிறுத்தப்பட்டு, குணமடைந்து, ஓய்வு பெறும். இதன் பலனாக அதிகரித்த ஆற்றல் திறன், ஆரோக்கியம் மற்றும் குணமாகும் நன்மைகளை நாம் பெறலாம். செரிமானத்திற்கு என்று சொந்த ஆற்றல் திறனும், அன்றாட ரிதமும் உள்ளது. இதன் ஏற்ற இறக்கத்தால் தான் காலையில் லேசாக பசிக்கிறது, மதியம் அதிகமாக பசிக்கிறது, இரவில் லேசாக பசிக்கிறது. இந்த இடைப்பட்ட நேரங்களில், நீங்கள் உட்கொண்ட உணவை செரிமானமடைய செய்வதற்கு, உங்கள் செரிமான அமைப்பு பசியை கட்டுப்படுத்தி விடும். செரிமானம் முடிந்தவுடன் மீண்டும் பசியெடுக்க தொடங்கும். இந்த செயல்முறைக்கு தடங்கல் வந்தாலோ அல்லது பாதிக்கப்பட்டாலோ, உங்கள் உடல் குழம்பி போய்விடும். இதனால் உங்கள் பசியும், செரிமானமும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து செயல்பட தொடங்கிவிடும். இதனால் உங்கள் செரிமான சக்தியும் ஒட்டு மொத்த உடலின் உற்சாகமும் குறைந்துவிடும். உங்கள் செரிமானத்தில் பிரச்சனை இருப்பதை நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால், இந்த செயல்முறையை உடனே பின்பற்றுங்கள்:


• காலை எழுந்தவுடன் 1-2 மணிநேரத்தில் காலை உணவை உண்ண வேண்டும்.
 • மதிய உணவு தான் நீங்கள் அன்றைய நாளில் உண்ணக் கூடிய அதிகப்படியான அளவை கொண்ட உணவாக இருக்க வேண்டும். • மதிய உணவிற்கு பிறகு நொறுக்குத்தீனியோ அல்லது மதுபானமோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.
 • குறைந்த அளவிலான ஆனால் திருப்திகரமான இரவு உணவை உட்கொள்ளுங்கள். படுப்பதற்கு 2 மணிநேரத்திற்குள் இரவு உணவை முடித்து விடுங்கள்.
 • இரவு உணவிற்கு பிறகு இரண்டு டம்ளர் இளஞ்சூடான தண்ணீரை குடியுங்கள்.
செரிமானத்தை மீட்டமைப்பதற்கு முன் அதனை குறைக்க வேண்டும். அதற்கு உணவருந்தாமல் நீராகாரமாக குடிக்க வேண்டும். 
• காலை அல்லது மதிய வேளையில் சிறிது தூரம் நடை கொடுங்கள். • காலை, மதியம் மற்றும் சாயங்காலத்தில் ஜூஸ் குடியுங்கள். 
• உங்களுக்கு பசி எடுத்தாலும் சரி அல்லது விருப்பப்பட்டாலும் சரி, இரண்டு வேளைகளுக்கு மத்தியில், நாள் முழுவதும் 3-4 கிளாஸ் குடிக்கலாம். • தண்ணீரை அடிக்கடி குடியுங்கள். குறிப்பாக நற்பதமான எலுமிச்சை கலக்கப்பட்ட தண்ணீர். 
• மிதமான நடவடிக்கை செய்து அன்றைய நாளை அமைதியாக கொண்டு செல்லுங்கள்.
உங்கள் செரிமானத்தை மீண்டும் தொடங்க செய்து, அதன் இயல்பான சுழற்சிகளில் செயல்பட வைக்க வேண்டும்
. • காலையில் எழுந்த 1-2 மணிநேரத்திற்கு பிறகு மிதமான காலை உணவை எடுத்துக் கொள்ளவும். 
• நண்பகல் வரை எதுவும் உண்ண வேண்டாம். மதிய வேளையில் திருப்தி அளிக்கக்கூடிய உணவை உண்ணுங்கள், ஆனால் அதிகமாக அல்ல.
 • மீண்டும் இரவு உணவு உண்ணும் வரை எதுவும் உண்ணாதீர்கள். படுப்பதற்கு 2-3 மணிநேரத்திற்கு முன் இரவு உணவை முடித்துக் கொள்ளவும். மதிய உணவின் அளவை விட இரவு உணவு குறைவாக இருக்க வேண்டும்.  
உங்கள் செரிமானம் மீட்டமைப்பு அடைந்துள்ளதால், உங்களின் பசி சுழற்சி இயற்கையாகவே இதனை கேட்க செய்யும்:
 • காலை எழுந்த 1-2 மணிநேரத்திற்கு பிறகு மிதமான காலை உணவு. • தினமும் அதே நேரத்தில் கணிசமான மதிய உணவு.
 • தினமும் சீக்கிரமாக உண்ணக்கூடிய மிதமான இரவு உணவு. உங்கள் செரிமானத்தை சீர்படுத்த வேண்டும் என நீங்கள் நினைத்தால், இந்த செயல்முறையை எப்போது வேண்டுமானாலும் பின்பற்றலாம். இதனால் உங்கள் செரிமான பிரச்சனைகள் குணமடைந்து, உங்கள் ஆற்றல் திறனும் ஆயுளும் அதிகரிக்கும்.