நெல்லி யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது.இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது.
Sunday, 3 May 2015
Saturday, 2 May 2015
அத்திப் பழம்
அத்தி மர வகையைச் சேர்ந்தது. நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உதிர்ந்து விழுந்து விடும்.
Wednesday, 29 April 2015
இந்திராவதி ஆறு
இந்திராவதி ஆறு கோதாவரி ஆற்றின் கிளை ஆறு ஆகும். இது மத்திய இந்தியாவில் ஓடுகிறது. இந்த ஆறு கிழக்குத் தொடர்ச்சி மலையின் தண்டகாரண்ய மலைத் தொடரில் உற்பத்தியாகிறது. இது சட்டீஸ்கர், மகாராட்டிரம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லை வழியாகச் செல்கிறது. மகராட்டிரத்திற்கும், சட்டீஸ்கருக்கும் இடையே பல இடங்களில் இந்த ஆறே எல்லையாக உள்ளது. இந்தியாவின் மிகவும் பசுமையான மாவட்டமாக அறியப்படும் பாஸ்டர் வழியாகச் செல்கிறது.
Tuesday, 28 April 2015
பியாஸ் ஆறு
Monday, 27 April 2015
ஒட்டகம்
ஒட்டகம்
ஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலு}ட்டி விலங்கு ஆகும். பொதுவாக ஒட்டகம் என்று அழைக்கப்படும் ஒட்டகப் பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன. இவை ஆசியா, வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைநிலங்களை தாயகமாகக் கொண்டவை. இவை பொதுவாக 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன. ஒட்டகங்களை மனிதர்கள் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒட்டகத்தின் மயிரும், தோலும் வெப்பத்தடுப்பானாக பயன்படுகிறது அதன் சிறப்பம்சமாகும். கடும் குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்பநிலையை 34 டிகிரி செல்சியசிலிருந்து 41.7 டிகிரி செல்சியஸ் வரை தானாக மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது.