Monday, 8 December 2014

மாடர்ன் ஒலிம்பிக்கில் அதிக அளவு பதக்கம் பெற்ற நாடு எது?

 இயற்கை
மாணவர்களே ஒலிம்பிக் பற்றி அறிந்து கொள்ள ஆவலா.........அப்போ சரி இதை படியுங்கள்.
•ஒலிம்பிக் போட்டியின் நோக்கம் என்ன?
வேகமாக, உயரமாக, வலுவாக (Citius-Altius-Fortius) இலத்தீன் மொழியிலான இந்த சொற்றொடரை உருவாக்கியவர். ஹென்றி மார்டின் டிடியோன்.
• ஒலிம்பிக் போட்டி முதன்முதலில் எப்போது நடைபெற்றது?
கி.மு. 776ம் ஆண்டு
• மாடர்ன் ஒலிம்பிக் என்று ஒலிம்பிக்கில் மறுமலர்ச்சி எப்போது ஏற்பட்டது?
கி.பி 1896
• மாடர்ன் ஒலிம்பிக் 1896ம் ஆண்டு போட்டியின் தந்தை யார்?
பிரான்ஸ் நாட்டின் பாரன் டி குபேர்டின் (Baron-de-cuberdin)
• ஒலிம்பிக்கை Unfinished Symphony என்று சொன்னவர் யார்?
குபேர்டின்
• கிரிக்கெட் ஆட்டம் ஒலிம்பிக்கில் எப்போது இடம் பெற்றது? வெற்றி பெற்ற அணி எது?
1900 - பாரிஸ் ஒலிம்பிக். இங்கிலாந்து வெற்றி பெற்றது. பிரான்ஸ் அணி தோற்றது.
• முதலாவது மாடர்ன் ஒலிம்பிக்கில் அதிக அளவு பதக்கம் பெற்ற நாடு எது?
அமெரிக்கா, தடகளப் போட்டிகளில் 9 வெற்றிகளைப் பெற்றது. கிரீஸ் மாரதான் போட்டியினை வென்றது.
• ஒலிம்பிக்கில் விளையாட்டுப் போட்டிகள் தவிர மற்ற கலை சார்ந்த போட்டிகள் இடம் பெற்றன. அவை யாவை?
1912 முதல் 1948 வரை - இசை, ஒவியம், இலக்கியம், சிற்பம், கட்டிடக்கலை. இவை தற்போது இடம் பெறுவதில்லை.
• ஒலிம்பிக்கில் முதன்முதலாக எத்தனை போட்டிகள் நடைபெற்றன?
ஒட்டப்பந்தயங்கள் மட்டும்.
• ஒட்டப்பந்தயத்தைத் தொடர்ந்து சேர்க்கப்பட்ட போட்டிகள் எவை?
குத்துச்சண்டை, மல்யுத்தம், தேர்ஓட்டுதல் மற்றும் எறிதல், ஈட்டி எறிதல்.

மூளையை பலப்படுத்தும் உணவுப் பொருட்கள்

நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் தான் சிறந்த உடல் நலத்தை பெற முடியும் என்று நீங்கள் நம்புகின்றீர்களா? அப்படியானல் எந்த வகையான உணவை தினமும் எடுத்துக் கொள்ளலாம்....
மாணவர்களின் மூளை அன்றாடும் பலவிதமான வேலைகளை செய்து வருகின்றது. பல்வேறு பிரச்னைகள் தீர்ப்பதில், கற்றல், படித்தல், தேடுதல் என்று பல உயிரி-வேதியியல் செய்முறைகளை செய்து வருகின்றது.
இந்த பணிகளை தொடர்ச்சியாக செய்வதற்கு மூளையின் செல்கள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.
ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உட்கொள்வதின் மூலம் மூளைக்கு செல்லும் நரம்புகள் சுறுசுறுப்பாக இயங்குகிறது. மாணவர்கள் வகுப்பறையில் முழு ஈடுபாட்டுடன் இயங்குவதோடு, இலக்குகளை சுலபமாக கைபற்ற உறுதுணையாக உள்ளது.
ஊட்டச்சத்து அதிகமாக உள்ள பலவகை உணவு பொருட்கள் மூளை இயக்கத்திற்கும், செயல்பாட்டிற்கும் உதவி புரிகிறது.
• பைபர் நிறைந்த ஓட்ஸ், ஓட்ஸ், பழுப்பு அரிசி, கோதுமை, ரொட்டி மற்றும் பழுப்பு பாஸ்தா போன்ற உணவு பொருட்களும், தாணியங்களும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
• ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலங்களை எடுத்துக் கொள்வதால் மூளையில் உள்ள செல்கள் ஆரோக்கியமாக பணிபுரிய உதவுகிறது. இந்த ஓமேகா பெரும்பாலும் கடல் உணவுப் பொருட்களான மீனில் அதிகம் காணப்படுகிறது.
• கருப்பு திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால், ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
• நட்ஸ் போன்ற உணவு வகைகளில் வைட்டமீன் இ அதிகமாக உள்ளது. இதை, தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
• கீரை வகைகளில் உயர்தர மெக்னீஷியம், பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது மூளையை வலுவடைய செய்கிறது.
• ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்வது நல்லது.
• வைட்டமீன், பி6, வைட்டடமீன் பி12, கால்சியல், மெக்னீஷியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் பாலில் அதிகம் உள்ளது.
• அன்றாடம் ஒரு காய்கறியாவது உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் உட்கொள்ளும் உணவு பொருட்களில் தினமும் இதை பின்பற்றி வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, மூளையும் வலுவு பெறுகின்றது.

Friday, 5 December 2014

இயற்கை

Kollihills
Kolli Hills
இயற்கை வளங்கள் ( பொருளாதார ரீதியில் நிலம் மற்றும் மூலப்பொருள் அல்லது கச்சா பொருட்கள்) எனப்படுபவை ஒப்பிட்டளவில் மனிதத் தலையீடுகளின்றித் தன் இயல்புநிலையில் சூழல் தொகுதிகளில் காணப்படும் பொருட்கள் ஆகும். இயற்கை வளங்கள் சுற்றுச்சூழலிலிருந்து தருவிக்கப்படுபவை. இவற்றில் பெரும்பான்மையானவை நம் வாழ்விருப்புக்கு அத்தியாவசியமானவையாகவும் தேவைகளுக்குப் பயன்படக்கூடியவைகளாகவும் அமைகின்றன. (இயற்கையில் காணப்படுவதும் மனித குலத்திற்குப் பயன்படுவதுமான கூறுகள் இயற்கை வளங்கள் எனப்படும்).